முட்டாள்கள் தினத்தில் ஏமாற்றம் : போலி இசை நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தில் பொலிஸாருடன் மோதல் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

முட்டாள்கள் தினத்தில் ஏமாற்றம் : போலி இசை நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தில் பொலிஸாருடன் மோதல்

பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தையொட்டி, சமூகத் தளத்தில் அறிவிக்கப்பட்ட போலி இசை நிகழ்ச்சிக்கு சுமார் 2,000 பேர் திரண்டுள்ளனர். 

இதன்போது பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டதால் கூடியவர்களை கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 31 ஆம் திகதி சமூகத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி சட்டவிரோதமானது என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படலாம் என்றும் பிரஸ்ஸல்ஸ் சட்ட அமுலாக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். 

அங்கு வெளி இடங்களில் 4 பேருக்கும் அதிகமானோர் ஒன்றுகூடக்கூடாது என்ற கொவிட்-19 தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடு நடப்பில் உள்ளது.

11.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெல்ஜியத்தில் 882,000க்கும் அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 23,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment