உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டத்துக்காக மக்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.
சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் ஆராதனைகளில் பங்கேற்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தேவாலயத்துக்கும் தனித்தனியே பாதுகாப்பு வழங்குவது மிகவும் கடினம் என்பதனால் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
பாதுகாப்பை வழங்கும் செயற்பாடுகள் இந்த வார ஆரம்பத்திலிருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு அமுல்படுத்தப்படுமென்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
அதற்கமைய நாடு முழுவதுமுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும், 12,000 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment