மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் இரு இளைஞர்கள் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் இரு இளைஞர்கள் பலி

(செ.தேன்மொழி)

பன்னிபிட்டி - பத்தரமுல்ல வீதியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டி - பத்தரமுல்ல வீதியில் பொல்வத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பத்தரமுல்ல பகுதியிலிருந்து பொரளை நோக்கிச் சென்ற காரை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னோக்கி செல்ல முற்பட்ட போது காருடன் மோதி, பின்னர் அது மின் கம்பத்திலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞர் கலுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும், மீகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad