இளவரசர் பிலிப் மரணம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் என குறை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

இளவரசர் பிலிப் மரணம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் என குறை

பிரிட்டனில் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதையடுத்து, அவருடைய நீண்ட வாழ்க்கையைக் குறிப்பிட்டு அஞ்சலி செலுத்துவதில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி மும்முரமாக இறங்கியுள்ளது.

வழக்கமான நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு சிறப்புச் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.

குறிப்பாக பி.பி.சி செய்தி நிறுவனம் தனது 2 ஒளியலைகளை முற்றிலும் இளவரசர் பிலிப் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கிவிட்டது. 

இதனால் ஏமாற்றமடைந்த பலர் இளவரசர் பிலிப் குறித்து அளவுக்கதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாகக் குறைகூறியுள்ளனர்.

அவர்கள் புகார் அளிப்பதற்காகவே இணைய விண்ணப்ப முறை ஒன்றை பி.பி.சி உருவாக்கியுள்ளது. விருப்பமான நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறினர்.

இதற்கிடையில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இளவரசரைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் போதுமான அளவு ஒளிபரப்பவில்லை என்ற குறைகூறல்களும் எழுகின்றன.

இளவரசரின் இறுதிக்கிரியை வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நேரம் என்பதால் வெகுவிமர்சையாக ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment