மூலப் பொருட்களின் இறக்குமதி தட்டுப்பாடால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி பெருமளவில் பாதிப்பு - தெங்கு மேம்பாட்டு அதிகார சபை - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

மூலப் பொருட்களின் இறக்குமதி தட்டுப்பாடால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி பெருமளவில் பாதிப்பு - தெங்கு மேம்பாட்டு அதிகார சபை

(இராஜதுரை ஹஷான்)

மூலப் பொருட்களின் இறக்குமதியில் தட்டுப்பாடு காணப்படுகின்றமையினால் உள்ளூர் மட்டத்திலான தேங்காய் எண்ணெய் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதென தெங்கு மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் பியசேன எதிரிமன்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டு மக்களின் தேவைக்காக தேங்காய் எண்ணெய் 70 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதன்படி தேங்காயுடன் தொடர்புடைய உற்பத்திகள் மற்றும் உள்நாட்டு தேவைகள் தொடர்பான தொழில்களின் தேவையை பூர்த்தி செய்ய வருடாந்த தேங்காய் உற்பத்தி விளைச்சல் போதுமானதாக இல்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தேங்காயை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கிராம புறங்களில் முன்னெடுக்கப்படும் குடிசை கைத்தொழிலுக்கு அமைய தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த கிராமிய மட்டத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

30 வீதமாக மேற்கொள்ளப்படும் தேசிய தேங்காய் உற்பத்தியிலும் பல சிக்கல் நிலை தற்போது ஏற்பட்டுள்ளன.

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதியில் பற்றாக்குறை காணப்படுவதால் உற்பத்திகளை மேம்படுத்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தும் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் உள்ளூர் தேங்காய் எண்ணெய்க்கு அதிக கேள்வி காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad