நுவரெலியாவில் ஒன்றுதிரண்டு மக்கள் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

நுவரெலியாவில் ஒன்றுதிரண்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா, ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியா பகுதியில் இருந்து வெலிமடை பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று அப்பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது.

இதன்போது, குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை சுமார் 1 மணித்தியாலயம் முன்னெடுத்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment