கொழும்பு துறைமுக நகரில் விசேட பொருளாதார வலயம் : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது சட்டமூலம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

கொழும்பு துறைமுக நகரில் விசேட பொருளாதார வலயம் : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது சட்டமூலம்

கொழும்பு துறைமுக நகரில் விசேட பொருளாதார வலயத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பில் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு நாளை (09) நடத்தப்படும் என சபை முதல்வர், அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரே நாடு ஒரே சட்டம் என தெரிவிக்கப்பட்ட போதிலும், ஒரு நாட்டிற்குள் இருவேறு சட்டங்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல இதன்போது கூறினார்.

இதனால், கொழும்பு துறைமுக நகர் குறித்து கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad