பசறை-13 ஆவது மைல் கல்லருகே விபத்திற்குள்ளான தனியார் பஸ்சின் சாரதி 33 தினங்களுக்குப் பின்னர் பத்து இலட்ச ரூபா இரு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பசறை - நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் இது தொடர்பான வழக்கு, நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கை பரிசீலனை செய்த நீதிபதி, தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவிற்கமைய, விபத்துக்குள்ளான பஸ்சின் சாரதியை பத்து இலட்சம் ரூபாவிற்கான இரு சரீரப்பிணைகளில் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த மாதம் 20ஆம் திகதி மீளவும், பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 20ஆம் திகதி காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்கு உட்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பதுளை தினகரன் விசேடநிருபர்
No comments:
Post a Comment