வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (03) மாலை கைது செய்துள்ளனர்.

வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் சார்ஜன்ட் விக்கிரமசூரிய, சமீர, நிமல உள்ளிட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடிய இளைஞன் ஒருவரை சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து 60 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞன் குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment