யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை நீடிப்பு! - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி ஒரு வாரத்திற்கு யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுவதாக இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கும்போதே திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment