இளைய சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்ட மூத்த சகோதரன் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

இளைய சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்ட மூத்த சகோதரன் பலி

(எம்.மனோசித்ரா)

மினுவாங்கொடையில் இளைய சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு மூத்த சகோதரன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மினுவாங்கொடை - வட்டினாபஹா பிரதேசத்தில் 27 வயதுடைய இளைய சகோதரனால் 32 வயதுடைய மூத்த சகோதரன் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தாண்டுக்கு முன்னரும், புத்தாண்டின் பின்னரும் இவ்வாறு குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் கவலைக்குரியதாகும். எனவே இவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad