காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைலை வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்றுக்கு தற்போது அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது 'லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் எம்முடன் தொடர்பில் இருந்த நபர்கள் தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும். பாதுகாப்பாக இருங்கள்.' என பதிவிட்டிருக்கிறார்.
கொரோனா தொற்று பரவ அச்சம் காரணமாக மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை ராகுல் காந்தி ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment