இலங்கையின் விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார் அமைச்சர் பிரசன்ன - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இலங்கையின் விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார் அமைச்சர் பிரசன்ன

புதிய கொவிட்-19 தொற்று வகைகள் கண்டறியப்பட்ட போதிலும், இலங்கையின் விமான நிலையங்களை மூட அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும்போது பாதுகாப்பு செயல்முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

கம்பஹாவில் இன்றையதினம் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய கொவிட்-19 தொற்று வகைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டபோதிலும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.

சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பான மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad