பாக்கு நீரிணையை கடந்த இலங்கை விமானப் படையின் சிரேஷ்ட படை வீரர் தரமுயர்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

பாக்கு நீரிணையை கடந்த இலங்கை விமானப் படையின் சிரேஷ்ட படை வீரர் தரமுயர்வு

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த, இலங்கை விமானப் படையின் சிரேஷ்ட படை வீரர் ரொஷான் அபேசுந்தர, கோப்ரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இன்று (15) முதல் அமுலாகும் வகையில் குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

இலங்கையின், தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி பாக்குநீரிணை ஊடாக நீந்திச் சென்ற அவர், அங்கிருந்து மீண்டும் இலங்கை திரும்பியிருந்தார்.

இதற்காக அவர், 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை எடுத்துக் கொண்டதன் மூலம், புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

குறித்த சாதனையை பாராட்டும் வகையில், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவினால், சிரேஷ்ட விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதோடு, இந்நிகழ்வு இன்றையதினம் (15) இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment