ஈஸ்டர் முட்டைகள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய மியன்மார் போராட்டக்காரர்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

ஈஸ்டர் முட்டைகள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய மியன்மார் போராட்டக்காரர்கள்

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள்தான். மேற்கத்திய நாடுகளில் இந்த ஈஸ்டர் முட்டைகள் மிகப்பிரபலம்.

இந்த நிலையில் மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள் ஈஸ்டர் முட்டைகள் மீது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான படங்களை வரைந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.‌

யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்கள் ஈஸ்டர் முட்டைகளை கையில் ஏந்தி ராணுவ ஆட்சிக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

இது ஒருபுறமிருக்க பூக்கள் போராட்டம் என்கிற பெயரில் மற்றொரு போராட்டத்தையும் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். அதன்படி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் நினைவாக சாலைகளில் பூங்கொத்துகளை வைத்து போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad