மேலும் 6 மில்லியன் 'Sputnik V' தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் - ஒன்று 9.95 அமெரிக்க டொலர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

மேலும் 6 மில்லியன் 'Sputnik V' தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் - ஒன்று 9.95 அமெரிக்க டொலர்

மேலும் 6 மில்லியன் 'ஸ்புட்னிக் வீ' (Sputnik V) தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (05) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.

இன்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Sputnik V ரஷ்ய கொவிட்-19 தடுப்பூசியை இலங்கையின் அவசர தேவைக்காக பயன்படுத்துவதற்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் விசேட நிபுணர் குழு, கடந்த மார்ச் 04ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 7 மில்லியன் Sputnik V தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, அதே விலையில், மேலும் 6 மில்லியன் Sputnik V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment