தம்புள்ளையில் 28,000 லீட்டர் தேங்காய் எண்ணெயுடன் லொறி பறிமுதல் - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

தம்புள்ளையில் 28,000 லீட்டர் தேங்காய் எண்ணெயுடன் லொறி பறிமுதல்

தம்புள்ளை பகுதியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் கொண்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் லொறியொன்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்றிரவு 7.30 மணியளவில் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியார் கிடங்களில் பவுசர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதே 28,000 லீட்டர் தேங்காய் எண்ணெயுடன் குறித்த லொறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத, பொலிஸ் தல‍ைமையக ஆய்வாளர் எஸ்.பி. எதிரிசிங்க மற்றும் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இந்த அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மனித நுகர்வுக்கு தரம் வாய்ந்ததா என்பதை கண்டறிய அவற்றின் மாதிரிகள் பெறப்பட்டு, ஆய்வக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை விநியோகிப்பதற்கோ அல்லது களஞ்சியப்படுத்துவதற்கோ பெற்றுக் கொடுக்கப்பட்ட சட்ட ரீதியான ஆவணங்கள் எவையும் இருக்கவில்லை என தம்புள்ளை நகர மேயர் ஜாலிய ஒபாத தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad