22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பியவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பியவர் கைது

ஸ்பெயினில் 22 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான அந்த ஆடவர் கடும் காய்ச்சல், இருமலுக்கு மத்தியிலும் தொடர்ந்து வேலைக்கு மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று வந்துள்ளார்.

மாஜீர்கா பகுதியில் பணி புரிந்து வந்த அவர் முகக்கவசத்தை அகற்றி இருமி விட்டு எல்லோருக்கும் தொற்றை வழங்கப்போவதாக சக ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐந்து சக ஊழியர்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவரது 14 குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்த ஆடவருக்கு பல நாட்களாக நோய் அறிகுறிகள் இருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருப்பதை மறுத்துள்ளார் என்று ஸ்பெயின் பொலிஸார் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மாலையில் பீ.சி.ஆர் சோதனை செய்து கொண்ட நிலையில் அதன் முடிவு வருவதற்கு முன்னரே வேலைக்கு மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை வீட்டுக்குச் செல்லும்படி சகாக்கள் கேட்டுக்கொண்டபோதும் அதனை அவர் மறுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad