20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் - தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் - தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதியின் பொகவான சந்தியிலே இன்று (20) காலை இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்ததாவது இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத் தேயிலை பறித்தோம். ஆனால் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ பச்சைக் கொழுந்து நாளொன்றுக்கு பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதுடன் அவ்வாறு 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் 03 நாட்களே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இதுவரை வழங்கியிருந்த சுகாதாரம் சம்பந்தமான சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அரசாங்கம் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு, அத்தியாவசிய விலை உயர்வினாலேயே ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வை கோரினோம். ஆனால் இப்போது பச்சைக் கொழுந்து அதிகளவில் பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றது. 

ஆகவே நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், தொழிலமைச்சர் மற்றும் மலையக பிரதிநிதிகள் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடன் தொடர்புகொண்டு கேட்ட போது தற்போது தேயிலை கொழுந்து அதிகளவில் காணப்படுகிறது. அகவேதான் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்க கோரினோம். தேயிலை செடிகளில் வளர்ந்திருக்கும் பச்சைக் கொழுந்தினை வீணாக வெட்டி வீச முடியாதெனவும் குறிப்பிட்டார்.

சுமார் 300 தொழிலாளர்கள் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கலைந்து சென்றனர் .
மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment