அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 11 நாட்களில் 350 மில்லியன் ரூபா வருமானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 11 நாட்களில் 350 மில்லியன் ரூபா வருமானம்

தமிழ் - சிங்களப் புத்தாண்டு காலப் பகுதியில் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் 1,236,288 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்ததுடன், இதனால் சுமார் 350 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 8 தொடக்கம் 18 வரையான காலப் பகுதியிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியுள்ளன. அதன்படி அன்றைய தினம் மொத்தம் 141,187 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் (E04) மீரிகம - குருணாகல் பிரிவு மே மாதத்தில் திறக்கப்படவுள்ளன. இதனால் 39.7 கிலோ மீற்றர் தூரத்தை 25 நிமிடங்களுக்குள் கடக்க முடியும்.

No comments:

Post a Comment