அசாத் சாலிக்கு மூன்று நாட்கள் தடுப்புக்காவல், விசாரணை நடத்த CID க்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 17, 2021

அசாத் சாலிக்கு மூன்று நாட்கள் தடுப்புக்காவல், விசாரணை நடத்த CID க்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி, மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

அசாத் சாலியிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அசாத் சாலியின் காரில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் தனியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad