வவுனியா சிதம்பரபுரம் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

வவுனியா சிதம்பரபுரம் வனப் பகுதியில் காட்டுத் தீ பரவல்

வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப் பகுதியில் காட்டுத் தீ பரவியதினையடுத்து தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வனப் பகுதியிலிருந்து புகை வருவதினை அவதானித்த அயலவர்கள் அருகே சென்று பார்வையிட்ட சமயத்தில் வனப் பகுதி தீப்பற்றி ஏரிந்து கொண்டிருந்துள்ளது. 

அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் வவுனியா நகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதினையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வவுனியாவில் நிலவி வருகின்ற அதிகூடிய வெப்பநிலையினால் இவ் காட்டுத் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad