அசோக் அபேசிங்க எம்.பியை விசாரணைக்கு அழைத்தது சி.ஐ.டி - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

அசோக் அபேசிங்க எம்.பியை விசாரணைக்கு அழைத்தது சி.ஐ.டி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு இன்றையதினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ தொடர்பு பட்டுள்ளதாக அசோக் அபேசிங்க தெரிவித்திருந்தார். 

அவரின் கருத்துக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment