பசறை - லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை பகுதியில், பஸ் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு ஊவா மாகாண ஆளுநர்ஏ.ஜே.எம். முஸம்மில் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார்.
இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரைப் பார்வையிடும் பொருட்டு வைத்தியசாலைக்கும் ஆளுநர் விஜயம் செய்தார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தோர் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பில் PCR பரிசோதனைகளை மேற்கொண்டு, கூடிய விரைவில் உடல்களை குடும்பத்தினருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிகிச்சைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறும் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த ஆளுநர், காயமடைந்தோர் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment