ரஷ்ய தயாரிப்பான 'ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி : ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

ரஷ்ய தயாரிப்பான 'ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி : ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம்

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 'ஸ்புட்னிக்' என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சின் கீழுள்ள தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நேற்று (10) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 2020 டிசம்பர் 28ஆம் திகதி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட பணிக்குழுவொன்று உருவாக்கப்பட்டதாகவும், 2021 ஜனவரி 28ஆம் திகதி (குறுகிய காலத்திற்குள்) எமது நாட்டிற்கு முதல்கட்ட தடுப்பூசிகளை பெற முடிந்தது என்பதாகவும், மறுநாளே நாம் நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணியை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முதற்தடவையாக எமக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் 5 லட்சம் கிடைத்ததை சுட்டிக்காட்டிய அவர் இந்த தடுப்பூசிகளில் 1.5 மில்லியன் வருகைக்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது. 

முதற்கட்டமாக 5 இலட்சம் ரூபா செலுத்தி மிகுதி 5 லட்சம் ரூபா பின்னர் செலுத்துவதற்கு நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டது. 

எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இரண்டாம் தொகுதி அதாவது ஐந்து லட்சம் தடுப்பூசி மருந்துகள் எமக்குக் கிடைக்கும் என்று லலித் வீரதுங்க நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் எமது நாட்டு ஜனாதிபதி ரஷ்ய நாட்டு ஜனாதிபதியிடம் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிகளைக் கேட்டுள்ளதாகவும், அதன்படி ரஷ்யாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு மிக விரைவில் முதற்கட்டமாக நன்கொடையாக கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment