இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் முயற்சியில் துருக்கி - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் உதயம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் முயற்சியில் துருக்கி - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் உதயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் கோரிக்கையின் பேரில் துருக்கி - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபித்தல் நிகழ்வு நேற்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர்.டிமெட் செர்கெர்சியோக்லு ஆகியோர் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களும், செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண ஆகியோரும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad