மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் பலி - திருகோணமலையில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் பலி - திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நபர் வைத்திருந்த மோட்டார் குண்டை கிரைண்டர் மெசின் மூலமாக அறுத்து மருந்துகளை எடுக்க முற்பட்டபோது குண்டு வெடித்துள்ளதாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து ஜெகன் எனும் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சடலத்தினை உறவினர்களிடம் இன்றையதினம் (20) கயளிக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad