கைதிகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ரொஹான் ரத்வத்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 17, 2021

கைதிகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ரொஹான் ரத்வத்த

சிறைச்சாலைகளின் கைதிகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்களுக்கு மேலும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

குறிப்பாக நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளிலும் கைதிகளுக்கான நலன்களை கருத்தில் ஈட்டு சிறந்த முறைகளிலான மருத்துவ பரிசோனைகள் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றியவாறான முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த சுட்டிக்காட்டினார்.

யாழ் சிறைச்சாலை தலைமை நிலை அதிகாரிகள் மற்றும் கைதிகளை மேற்பார்வையிடும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு இன்று யாழ் சிறைச்சாலையில் அதன் அத்தியட்சகர் எஸ்.பி.மொகன் கர்ணாரத்தன தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த கலந்துகொண்டார்.

இவ் சந்திப்பில் கைதிகளின் சுகாதார விடையங்களின் முக்கியத்துவம், சமூக இடைவெளியிலான பாதுகாப்பு, உணவுப் பழக்க வழங்கங்கள், தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் சிறைச்சாலைகளின் எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இவ் சந்திப்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் எச்.எம்.ரீ.டள்யூ உபுல்தெனியா,மற்றும் யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளது அந்த கைதி ஒருவருக்கான பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு தற்போது பூரண குணமடைந்தநிலை தற்போது யாழ்ப்பாண சிறைச்சாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

யாழ். நிருபர் ரமணன்

No comments:

Post a Comment