பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் இணக்கம்

அகில இலங்கை பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை துரிமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை நீண்ட நாள் படகு உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்ம் இடையிலான சந்திப்பொன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (23) இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், சர்வதேச மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வி.எம்.எஸ். வசதியற்ற (படகு கண்காணிப் கட்டமைப்பு) படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி வழக்கு தொடர்வதாகவும் வி.எம்.எஸ். வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது கடற்றொழில் திணைக்களத்தின் பொறுப்பு என்பதால் அதனை செய்யாமல் வழக்கு தொடர்வது நியாயமற்றது எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் அண்மையில் (17.03.2021) மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினால் கைப்பற்றப்பட்ட 06 படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட இச்சங்கத்தின் உறுப்பினர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட படகுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பவதை தாங்கள் ஆட்சேபிக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இவர்களது கோரிக்கைகளுக்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாடுகளின் கடற்படையினரால் எமது கடல் எல்லைக்கு அப்பால் எமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியாது.

இப்பிரச்சினையை இலங்கை வெளிவிவகார அமைச்சே கையாள வேண்டும். இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது உரிய சட்ட நடவடிக்கையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யபடுவர். ஆனால் அவர்களது படகுகளை விடுவிப்பதில்லை. அதற்கு எமது சட்டத்திலும் இடமில்லை. மியன்மாரை பொறுத்த மட்டில் அங்கு இராணுவ ஆட்சி நடைபெறுவதால் இவ்விடயத்தை உரிய முறையில் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

போதைப் பொருள் கடத்துபவர்கள் அதனை எப்படியாவது செய்கின்றனர். அதனை தடுக்க வேண்டுமானால் மீன்பிடி படகுகளுக்கு விசேட அடையாளம் இடலாம். அப்போது இரு நாடுகளின் அதிகாரிகளும் அதனை இலகுவாக அடையாளம் காணலாம். விரைவில் அவுஸ்ரேலிய அரசாங்கம் எமக்கு 4500 வி.எம்.எஸ். கருவிகளை வழங்கவுள்ளது. அதனை நாங்கள் கட்டங்கட்டமாக விநியோகிப்போம்.

உரிய சட்டங்களை அமுல்படுத்த தவறினால் எமது கடற்றொழில் வீழ்ச்சி அடையும். அதனால் மீனவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். கடற்றொழில் திணைக்களத்தையும் அமைச்சினையும் குறை சொல்லக்கூடாது. அவை இரண்டும் நன்றாகவே செயற்படுகின்னறன.

கொவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் எமது அமைச்சும் திணைக்களமும் நன்றாக செயற்பட்டது. அண்மையில் எமது அமைச்சினால் 700 மில்லியன் ரூபா செலவில் பேலியகொடை மீன் 

மொத்த விற்பனை கட்டிடத் தொகுதி நவீன மயப்படுத்தப்பட்டது. மீன் கருவாடு மற்றும் மாசி போன்றவற்றுக்கு நாங்கள் கணிசமாக இறக்குமதி வரியை அதிகரித்தோம். இதனால் இறக்குமதியாளர்களின் வெறுப்பிற்கு நாங்கள் ஆளாகியுள்ளேம்.

பல்வேறு தூதரக அதிகாரிகள் வரியை தளர்த்துமாறு தூதரக மட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment