நிலவுப் பயணத்தில் இணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜப்பான் செல்வந்தர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

நிலவுப் பயணத்தில் இணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜப்பான் செல்வந்தர்

எலோன் மாஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிலவுப் பயணத்தில் இணைவதற்கு ஜப்பான் செல்வந்தரான யுசாகு மெசாவா பொதுமக்களில் எட்டுப் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“அனைத்து வகையான பின்புலத்தையும் கொண்டவர்களை இணைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன்” என்று டவிட்டரில் வீடியோ வழியாக குறிப்பிட்டிருக்கும் அவர், அது தொடர்பில் விண்ணப்பிப்பதற்கான விபரத்தையும் இணைத்துள்ளார்.

இந்த பயணத்திற்கான ஒட்டு மொத்த செலவையும் தாம் பார்த்துக் கொள்வதாகவும் பயணத்திற்கு முன்வருவோர் இலவசமாக பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டியர்மூன் என்ற இந்தப் பயணத் திட்டம் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது.

ஜப்பானில் ஆடை அலங்கார தொழிலதிபரும் கலைப் பொருட்களை சேகரிப்பவருமான மெசாவா ஆரம்பத்தில் இந்தப் பயணத்திற்கு கலைஞர்களை சேர்த்துக் கொள்வதற்கு திட்டமிட்டபோதும், தற்போது அது உலகெங்கும் உள்ள மக்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் மூலம் நிலவை சுற்றிவந்த முதலாவது தனியார் பயணியாக மெசாவா 2018 ஆம் ஆண்டு பதிவானார்.

பணத்தை வாரி வழங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ள மேசாவா ட்விட்டரில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட ஜப்பானியராக உள்ளார்.

கடந்த ஆண்டு காதலியைத் தேடும் தம் முயற்சியை ஆவணப்படமாக எடுக்க அவர் முயன்றார். பின்னர் மனமாற்றத்தினால் அதிலிருந்து விலகினார்.

No comments:

Post a Comment