புலிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை கண்டுகொள்ளாத தரப்பினர் இன்று விமர்சிப்பது கவலை - அமைச்சர் சிறிபால கமலத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

புலிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை கண்டுகொள்ளாத தரப்பினர் இன்று விமர்சிப்பது கவலை - அமைச்சர் சிறிபால கமலத்

மூன்று தசாப்த காலம் புலிப் பயங்கரவாதம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனித உரிமைகள் குறித்து எவ்விதத்திலும் கவனம் செலுத்தாத சில சர்வதேச அமைப்புகள், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் தவறான முடிவுகளைக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயம் என்று மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் குடியிருப்புக்களின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத் குறிப்பிட்டார்.

மகாவலி திட்டத்தின் டி வலயத்திற்கு உட்பட்ட மெதிரிகிரிய பிசோபுர, வெடிகச்சிய பிரதேசத்திலுள்ள பலோகொட்டுவ குளத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகள் இயக்கப் பயங்கரவாதம் காரணமாக இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அன்று பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். 

இந்நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அன்றைய பாதுகாப்பு செயலாளரும் இன்றைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவும் இல்லையெனில் இப்பிரதேச மக்களின் வாழ்வை உறுதிப்படுத்த எவரும் இல்லாத நிலை நீடித்திருக்க முடியும்.

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இன்று எங்கள் நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் கதைப்பவர்கள் எவரும் அன்று இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்பவுமில்லை. ஒரு வசனம் கூட கதைக்கவும் இல்லை. 

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமுள்ள புள்ளி விபரங்கள் தொடர்பில் எம்மால் திருப்பி அடைய முடியாது. தவறான தகவல்களைக் கொண்டிருக்கும் சர்வதேச அமைப்புகள் இலங்கையரின் கௌரவத்திற்கு கலங்கம் ஏற்படுத்துவது பாரிய தவறாகும்.

இங்குள்ள அயற் கிராமமான பள்ளியகொடல்ல கிராமத்தில் சுமார் 290 பேர் புலிப் பயங்கரவாதிகளால் அன்று படுகொலை செய்யப்பட்டனர். இந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அன்று எவரும் முன்வரவில்லை. 

அதனால் அடிப்படை வாதிகளின் புள்ளி விவபரங்களில் தங்கியுள்ள அமைப்புக்கள் இறைமையுள்ள நாட்டுக்கு அழுத்தங்களைத் தெரிவிக்க இடமளிக்க முடியாது.

மர்லின் மரிக்கார்

No comments:

Post a Comment