புற்றுநோயினால் பாதிக்கப்பட்டேன் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டேன் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

எனக்கு புற்றுநோய் இருந்தது. அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, நான் அரசியலில் மாத்திரம் பிரவேசித்து இருக்காவிட்டால் பணக்கார பெண்மணியாக இருந்திருப்பேன்.

இதேவேளை நானொரு உண்மையயை கூற விரும்புகின்றேன். எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் இருந்தது. இவ்வாறு புற்றுநோய் ஏற்படுவதற்கு எந்ததொரு காரணமும் என்னிடம் இல்லை.

ஆனால் அதிகாரம் என்னிடம் இருந்து சென்றபோது மன ரீதியாக பாதிக்கப்பட்டதுடன் மிகவும் தனிமையில் இருந்தேன். இதுதான் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணமாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயை கண்டறிந்தமையினால், கதிரியக்க சிகிச்சையின் ஊடாக குணமடைந்தேன்.

அதாவது, மிகவும் ஆராக்கியமாக உள்ளேன் என்று கூறவில்லை. ஆனால் தற்போது உடல் நலத்தில் பிரச்சினையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad