2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்காக இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்காக இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் குறித்த டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த டெஸ்ட் தொடர் கடந்த வருடம் ஒக்டோபர் - நவம்பர் காலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொவிட்-19 பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இச்சுற்றுத் தொடரில்,

பயிற்சிப் போட்டி : ஏப்ரல் 17 - 18 - கட்டுநாயக்க மைதானம்
1ஆவது போட்டி : ஏப்ரல் 21 - 25 - பல்லேகலை
2ஆவது போட்டி : ஏப்ரல் 29 - மே 03 - பல்லேகலை

No comments:

Post a Comment