எலோன் மஸ்கினின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2,500 கோடி டொலர்களாக உயர்ந்தது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

எலோன் மஸ்கினின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2,500 கோடி டொலர்களாக உயர்ந்தது

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2,500 கோடி டொலர்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வராக உள்ளார்.

நேற்று அமெரிக்க பங்கு சந்தைகளில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை 20 சதவீதம் அதிகரித்தது. 

அந்நிறுவனத்தில் 21 சதவீத பங்குகளை வைத்திருக்கும் எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2,500 கோடி டொலர்கள் அளவுக்கு அதிகரித்து. 17,400 கோடி டொலர்களாக உயர்ந்தது.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான அமேசன் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ்சின் சொத்து மதிப்பு 600 கோடி டொலர்கள் அதிகரித்து 18,000 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க பங்கு சந்தையின் குறியீட்டு எண் நாஸ்டாக் நேற்று 3.7 சதவீதம் அதிகரித்ததால் ஆப்பிள், அமசோன், பேஸ்புக் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களின் பங்குகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad