அமெரிக்காவில் ஏப்ரல் 19 க்குள் 90 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி - அறிவித்தார் ஜனாதிபதி ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

அமெரிக்காவில் ஏப்ரல் 19 க்குள் 90 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி - அறிவித்தார் ஜனாதிபதி ஜோ பைடன்

ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது‌.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதேவேளையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.‌ 

ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது‌.

இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் திகதிக்குள் அமெரிக்காவில் உள்ள வயது வந்தோரில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். 

எஞ்சிய 10 சதவீதம் பேருக்கு மே 1ஆம் திகதிக்கு முன்னதாக தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.‌

இது குறித்து அவர் கூறுகையில், “இன்று நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் காரணமாக 90 சதவீத அமெரிக்கர்கள் ஏப்ரல் 19ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசியை பெறும் தகுதி பெறுகிறார்கள். ஏனெனில் நம்மிடம் போதுமான தடுப்பூசிகள் உள்ளன. 

நமது இந்த முன்னேற்றம் அமெரிக்கர்களாக நாம் ஒன்றாக செயல்படும் போது நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும்.‌ 

ஆனால் நான் எப்போதும் கூறுவதைப் போல் எல்லோரும் தங்கள் பங்கை செய்ய வேண்டும் நாம் இன்னும் இந்த கொடிய வைரஸ் உடனான போரில் இருக்கிறோம். நாம் நமது பாதுகாப்புகளை மேம்படுத்துகிறோம். ஆனால் போரில் வெற்றி பெறவில்லை” என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad