கண்ணில்பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளிய துப்பாக்கிதாரிகள் : 137 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

கண்ணில்பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளிய துப்பாக்கிதாரிகள் : 137 பேர் பலி

தென் மேற்கு நைகரில் மோட்டார் சைக்கிள்களில் பல கிராமங்களுக்குள் ஊடுருவி இருக்கும் துப்பாக்கிதாரிகள் குறைந்தது 137 பேரை படுகொலை செய்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மாலி நாட்டு எல்லைப் பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்திருக்கும் இந்தத் தாக்குதல்தாரிகள் கண்ணில்பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் தனது பயங்கரம் மற்றும் கொடூரச் செயல்களில் ஒரு படி மேல் சென்று பொதுமக்களை திட்டமிட்டு அச்சுறுத்துகிறார்கள்” என்று அரச பேச்சாளர் சகரியா அப்துர் ரஹ்மன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி சுட்டெண்ணில் 189 ஆவதாக உலகின் மிக வறிய நாடாக உள்ள நைகர், ஆயுத வன்முறைகளால் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

நைகரில் ஒரு வார காலத்தில் இடம்பெறும் இரண்டாவது மோசமான தாக்குதலாக இது உள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் திகதி வாரச் சந்தையில் இருந்து திரும்புபவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad