போமியுலா-1 கார்பந்தயத்தின் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் லீவிஸ் ஹமில்டன் முதலிடம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

போமியுலா-1 கார்பந்தயத்தின் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் லீவிஸ் ஹமில்டன் முதலிடம்

போமியுலா-1 கார்பந்தயத்தின் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹமில்டன், முதலிடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘போமியுலா-1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின் முதலாவது சுற்றான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்றுமுன்தினம் பஹ்ரைன் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.238 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 03.897 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.

அவரை விட 0.745 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபே இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார். 

37.383 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 16 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அடுத்த இரண்டாவது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ், அடுத்தமாதம் 18ஆம் திகதி, என்ஸோ இ டினோ ஃபெராரி ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad