தபாலில் அனுப்பப்பட்டது O/L பரீட்சை மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

தபாலில் அனுப்பப்பட்டது O/L பரீட்சை மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

மாகாண பாடசாலைகளுக்கான அனுமதி அட்டைகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும். மாணவர்களுக்கு இவை நாளை கிடைக்கும் எஎன்றும் ஆணையாளர் கூறினார்.

தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் நாளை தபாலில் சேர்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad