இம்ரான் கானை சந்திக்க எதிக்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் - இம்ரான் MP - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

இம்ரான் கானை சந்திக்க எதிக்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் - இம்ரான் MP

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க எதிர்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இம்ரான் கானின் விஜயம் தொடர்பாக கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு உள்ளிட்ட இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கித்தருமாறு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். 

இதுவரை இது தொடர்பாக சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. 

எதிர்க்கட்சி தலைவருக்குக்கூட இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

பாகிஸ்தான் பிரதமரை எதிர்க்கட்சியினர் சந்திக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என அறையக்கிடைத்தது. 

ஜனநாயக நாடு என்ற ரீதியில் இம்ரான் கானை சந்திக்க எதிக்கட்சியினருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad