ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைப்பதற்கான உத்தரவு விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்த வயதெல்லையை 14 முதல் 16 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தற்போது விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற தொழில் அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment