வர்த்தக வங்கிகளில் நடக்கும் பண மோசடி - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அஜித் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

வர்த்தக வங்கிகளில் நடக்கும் பண மோசடி - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அஜித் கப்ரால்

வர்த்தக வங்கிகளில் கணக்கு உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் பணம் அறவிடப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சில வங்கிகள் தவறாக எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்காமல் புதிய சட்ட திட்டங்கள் சிலவற்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

வங்கிகளில் வைப்பு வைத்துள்ள கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் நடவடிக்கை இடம்பெறும் என்றால் அது முழுமையாக தவறான விடயமாகும்.

எந்தவொரு வங்கிகளாலும் கணக்கு உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒரு சதமேனும் எடுக்க முடியாது. சில இடங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக எனக்கு தெரியும். அந்த விடயங்கள் தவறானவைகளாகும். 

கடந்த வாரம் 3 வீதம் வட்டி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அப்படி ஒன்றும் இல்லை. இதனால் புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment