கடந்த அரசாங்கத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

கடந்த அரசாங்கத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்க நடவடிக்கை

2019ஆம் ஆண்டில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி பட்டதாரிகளை இம்மாத இறுதிக்குள் அரச சேவையில் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகேன் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்குவது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனவரி மாத இறுதிக்குள் இந்த நியமனங்கள் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் சிலருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டமையின் காரணமாக அமைச்சின் சில பிரிவுகளை தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருந்தது. இதன் விளைவாக நியமனங்கள் வழங்கும் பணி தாமதமாகிவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் 08ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள பிரிவுகள் திறக்கப்பட்டதும் இந்த பட்டதாரிகளின் பணியை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment