இந்தியா - இலங்கைக்கிடையிலான உடன்படிக்கை இரத்துச் செய்யப்படவில்லை : ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

இந்தியா - இலங்கைக்கிடையிலான உடன்படிக்கை இரத்துச் செய்யப்படவில்லை : ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை

திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா - இலங்கைக்கிடையிலான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை.

2021 பெப்ரவரி 17 ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர், நிகழ்த்திய உரையை இந்த அறிக்கைகள் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை. இந்த விடயத்தை நேற்றுமுன்தினம் ஊடக சந்திப்பொன்றின் மூலமும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சரின் ஊடக சந்திப்பில் கூறப்பட்டது போலவே, 2017 இன் புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட ஏற்கனவே அமுலில் இருக்கும் இரு தரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் எண்ணெய்க் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குவதற்கு பரஸ்பரம் ஏற்புடையதான முறைமைகள் குறித்து இரு அரசாங்கங்களும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அதன் பெறுபேறுகளை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் துரிதமாக அமுல்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் உள்ளது.

No comments:

Post a Comment