நெதன்யாகு - பைடன் இடையே முதல் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

நெதன்யாகு - பைடன் இடையே முதல் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது

நீண்ட தாமதத்திற்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு இடையிலான முதலாவது தொலைபேசி உரையாடல் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 

நெதன்யாகுவுடன் 'நல்ல உரையாடல்' ஒன்று இடம்பெற்றதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல தசாப்தங்களாக நெருக்கமான உறவு இருந்து வந்த நிலையில் அது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்தி மிக நெருக்கமானதாக மாறி இருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சம்பிரதாயமான இந்த தொலைபேசி அழைப்பில் தாமதம் ஏற்பட்டு வந்ததை ஒட்டி பல சந்தேகங்கள் வெளியாகி வந்தன. 

குறிப்பாக வரும் மார்ச் 23 ஆம் திகதி இஸ்ரேலில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நெதன்யாகுவுடனான உறவை வலுப்படுத்த பைடன் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் ஈரானின் அச்சுறுத்தல் மற்றும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடன் இஸ்ரேல் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் பற்றி பைடனுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment