இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடும் - மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடும் - மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான விஜயம் மிகவும் முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் வேளையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து ஆராயப்படும் என்று கூறப்படும் அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு முரணான வகையில் கொரேனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கையைப் பின்பற்றுவதால் இலங்கை அரசாங்கம் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இலங்கை தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பிரதமரின் விஜயத்தின் நோக்கமாக இருக்கும் என்று கருதுகின்றோம். 

அத்தோடு பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம்களின் உரிமைகள் சார்பான கரிசனையை வெளிப்படுத்துவதோடு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அறிவித்தது. 

இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் முறையான பொறிமுறையொன்றை அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கடப்பாட்டை பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய நாடுகள் ஐ.நாவில் செயற்படும் முறையினூடாகத் தீர்மானிக்க முடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment