அம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களில் சிறியளவிலான நில அதிர்வு - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

அம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களில் சிறியளவிலான நில அதிர்வு

அம்பாறை மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் 4.0 ரிச்டெர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டது.

அம்பாறை மாவட்டத்தின், பொத்துவில், சர்வேதயபுரம், சின்னஉல்ல, ஜலால்தீன் சதுர்க்கம் ஆகிய கடற்கரை கிராமங்களிலேயே குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.44 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நில அதிர்வால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொதுமக்கள் சிறு பதற்றத்துடன் தாம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment