பதுளை - நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, காணாமற்போயிருந்த இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அவிசாவளையைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நண்பர்கள் 7 பேருடன் நேற்றிரவு, அவர் நாரங்கல மலைக்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கூடாரம் அமைத்து, அவர்களுடன் தங்கியிருந்த அவர், திடீரென வெளியில் சென்றுள்ளார்.
இவ்வாறு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வராததன் காரணமாக, ஏனைய அனைவரும் அவரை தேடியபோதும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதனால் பொலிஸாருக்கு அவர்கள் அறிவித்துள்ளனர். அதனைத் தொடந்து குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம், குறித்த இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment