இஸ்ரேலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தால் கொரோனா தொற்று மற்றும் நோய்ப் பாதிப்பு வீழ்ச்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

இஸ்ரேலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தால் கொரோனா தொற்று மற்றும் நோய்ப் பாதிப்பு வீழ்ச்சி

இஸ்ரேலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கொரோனா தொற்று மற்றும் நோய்ப் பாதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 750,000 பேரில் 531 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் புள்ளிவிபரம் காட்டுகிறது. 

இதில் நோய்த் தொற்றுக் காரணமான 38 பேர் மாத்திரமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட 743,845 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு குறைந்தது ஏழு நாட்களுக்கு பின் அவர்களின் மருத்துவ நிலையை பகுப்பாய்வு செய்தே சுகாதார அமைச்சு இந்த தரவை வெளியிட்டுள்ளது. 

தடுப்பூசி போடப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு முன்னதாகவே நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

தடுப்பூசி வழங்குவதில் உலகில் முன்னணியில் இருக்கும் இஸ்ரேலில் மொத்த மக்கள் தொகையான சுமார் ஒன்பது மில்லியன் பேருக்காக ஐந்து மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு மில்லியன் பேருக்கு இரண்டாவது முறை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment