மினுவாங்கொடயில் துப்பாக்கி, ஆயுதங்களுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 20, 2021

மினுவாங்கொடயில் துப்பாக்கி, ஆயுதங்களுடன் ஒருவர் கைது

(செ.தேன்மொழி)

மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மினுவாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், பொலிஸ் குழுவொன்று விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கி மற்றும் கூறிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட - பத்தட்டுவன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்கள் 16 மற்றும் 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள், 4 கத்திகள் என சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இந்த ஆயுதங்களை எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பது தொடர்பிலும், இவற்றை ஏதேனும் குற்றச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பிலும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad