மியன்மாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது, கடந்த வாரம் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுக்குள்ளான இளம் பெண் எதிர்ப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை உயிரிழந்த யுவதியின் சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக மியன்மார் முழுவதும் இரண்டாவது வாரமாக பொதுமக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களினால் உயிரிழப்பொன்று பதிவானமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
தலையில் இறப்பர் துப்பாக்கிப் பிரயோக காயத்துக்குள்ளாகி பெப்ரவரி 09 ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 வயதான மியா த்வேட் த்வேட் கைங் என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலைநகர் நய்பிடாவில் நடந்த ஒரு போராட்டத்தில் ஒரு நேரடி தோட்டா அவரது தலையில் தாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment